Wednesday, 9 May 2012

இறைவனின் இணைப்பு !





அம்மா...
உன் அரவணைப்பு.....
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் அருகாமை...
என் சுவர்க்கம் !


நான்..
உருவாய் வளர...
உன் உடல் தந்தாய்..
உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..
என் உலகமாய்..
நீயாகினாய்...
நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

மொழி அறியா..நான்..
உன் பேச்சில்....
மயங்குகிறேன்...
உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !
உனக்கும் எனக்கும்..
உறவையும்...
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !
இது..
தாய்.. சேய் என்னும்...
இறைவனின் இணைப்பு !

-காயத்ரி பாலாஜி 

No comments:

Post a Comment