Sunday, 20 May 2012

அன்பே உனக்காக ....

ஆழ் கடலின் அந்தி சூரியனின்...
வெளிச்சம்....
அலை கடலின்.....
ஓசை..
சில்லென்ற.....
காற்று....
அனைத்துமே....
இன்று.....
புதிதாய்....
ஓர்..உணர்வு....
அவள் அருகில்....
இருக்கின்றாள்....!

அறியா....வயது...
முதலே.....
அவளின்..அருகாமை....
இப்படியோர்...
உணர்வை...
தந்ததில்லை....
சிறு வயது முதல்...
சிநேகிதம்....
பழகியவர்கள்....
இன்று முதல்.....
காதலர்கள் என...
காவியம்....
படைக்க போகிறார்கள்....!

இவர்கள்...கதை...
சொல்லப் போகும்...
இக்கவிதையின்...
நாயகி.....கவிதா..
நாயகன்....கவியரசு...!

கவிதாவின் மனம் 
கவர்ந்த...
கவியரசு....
ஒரே குலத்து ...
உறவினன் அல்ல...
 தன்  தந்தையின்..
உற்ற நண்பனின்....
ஒரே மகன்....

இவர்கள்..
ஒரே நாளில்...
ஒன்றாய்..
பிறந்த....
நண்பர்கள்....
ஒருவருக்கொருவர்..
உற்ற..துணையாய்...
வளர்ந்தவர்கள்...!



 




 

Thursday, 10 May 2012



அன்புத் தோழிக்கு...
எங்கள் அணியின்...
தலைவிக்கு.....
அன்பளிப்பாய்...
அளிக்கிறோம்....
ஓர்...
அழகிய கவிதையை...!

நீல வானத்தின்...
வண்ணத் தூரிகையாம்..
வான வில்லாய்..
எங்கள் வானில்....
உதித்தீர்கள்..!

தூவானம்..
விட்டுச் செல்லும்..
தூறலாய்...

தேகம்...
வருடிச்  செல்லும்...
தென்றலாய்...

இதயம்..
தொட்டுச் செல்லும..
மெல்லிசையாய்..

காலையில்..மலர்ந்து...
மாலையில் ...உதிர்ந்து...

         வாசம் மட்டும்...
         விட்டுச் செல்லும்...
          மலர்களாய்...

          இரவை..
          விட்டுச் செல்லும்...
           சந்திரனாய்...

           பகலை..
           விட்டுச் செல்லும்...
           சூரியனாய்...

          எங்கள்...
         அன்புக்கு உரித்தாகி...
          எங்கள்..
                                                                                         அறிவை...ஆழ்ந்துணர்ந்து...
                                                                                          உங்கள்...
                                                                                         அனுபவத்தை...பகிர்ந்து...
                                                                                         எங்கள்...மனதில்..
                                                                                         உங்கள்..நினைவுகளை.
                                                                                          பதித்து விட்டுச் செல்லும்...
                                                                                          ஸ்ரீ தேவியே....

                                                                                          உங்கள்...
                                                                                         வழிகாட்டுதலுக்கு..
                                                                                         வந்தனமாய்..
                                                                                          எங்கள்..
                                                                                         அனைவரின்...
                                                                                         அன்பினையும்...சேர்த்து..
                                                                                         அன்பு மலர்களாய்...
                                                                                          சமர்ப்பிக்கின்றோம்....!








Wednesday, 9 May 2012

இறைவனின் இணைப்பு !





அம்மா...
உன் அரவணைப்பு.....
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் அருகாமை...
என் சுவர்க்கம் !


நான்..
உருவாய் வளர...
உன் உடல் தந்தாய்..
உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..
என் உலகமாய்..
நீயாகினாய்...
நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

மொழி அறியா..நான்..
உன் பேச்சில்....
மயங்குகிறேன்...
உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !
உனக்கும் எனக்கும்..
உறவையும்...
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !
இது..
தாய்.. சேய் என்னும்...
இறைவனின் இணைப்பு !

-காயத்ரி பாலாஜி