Puthiyathor ulagam seyvom......
Sunday, 13 January 2013
Sunday, 20 May 2012
அன்பே உனக்காக ....
ஆழ் கடலின் அந்தி சூரியனின்...
வெளிச்சம்....
அலை கடலின்.....
ஓசை..
சில்லென்ற.....
காற்று....
அனைத்துமே....
இன்று.....
புதிதாய்....
ஓர்..உணர்வு....
அவள் அருகில்....
இருக்கின்றாள்....!
அறியா....வயது...
முதலே.....
அவளின்..அருகாமை....
இப்படியோர்...
உணர்வை...
தந்ததில்லை....
சிறு வயது முதல்...
சிநேகிதம்....
பழகியவர்கள்....
இன்று முதல்.....
காதலர்கள் என...
காவியம்....
படைக்க போகிறார்கள்....!
இவர்கள்...கதை...
சொல்லப் போகும்...
இக்கவிதையின்...
நாயகி.....கவிதா..
நாயகன்....கவியரசு...!
கவிதாவின் மனம்
கவர்ந்த...
கவியரசு....
ஒரே குலத்து ...
உறவினன் அல்ல...
தன் தந்தையின்..
உற்ற நண்பனின்....
ஒரே மகன்....
இவர்கள்..
ஒரே நாளில்...
ஒன்றாய்..
பிறந்த....
நண்பர்கள்....
ஒருவருக்கொருவர்..
உற்ற..துணையாய்...
வளர்ந்தவர்கள்...!
Thursday, 10 May 2012
அன்புத் தோழிக்கு...
எங்கள் அணியின்...
தலைவிக்கு.....
அன்பளிப்பாய்...
அளிக்கிறோம்....
ஓர்...
அழகிய கவிதையை...!
நீல வானத்தின்...
வண்ணத் தூரிகையாம்..
வான வில்லாய்..
எங்கள் வானில்....
உதித்தீர்கள்..!
தூவானம்..
விட்டுச் செல்லும்..
தூறலாய்...
தேகம்...
வருடிச் செல்லும்...
தென்றலாய்...
இதயம்..
தொட்டுச் செல்லும..
மெல்லிசையாய்..
காலையில்..மலர்ந்து...
மாலையில் ...உதிர்ந்து...
வாசம் மட்டும்...
விட்டுச் செல்லும்...
மலர்களாய்...
இரவை..
விட்டுச் செல்லும்...
சந்திரனாய்...
பகலை..
விட்டுச் செல்லும்...
சூரியனாய்...
எங்கள்...
அன்புக்கு உரித்தாகி...
எங்கள்..
அறிவை...ஆழ்ந்துணர்ந்து...
Wednesday, 9 May 2012
இறைவனின் இணைப்பு !
உன் அரவணைப்பு.....
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் அருகாமை...
என் சுவர்க்கம் !
நான்..
உருவாய் வளர...
உன் உடல் தந்தாய்..
உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..
என் உலகமாய்..
நீயாகினாய்...
நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!
மொழி அறியா..நான்..
உன் பேச்சில்....
மயங்குகிறேன்...
உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !
உனக்கும் எனக்கும்..
உறவையும்...
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !
இது..
தாய்.. சேய் என்னும்...
இறைவனின் இணைப்பு !
-காயத்ரி பாலாஜி
Friday, 20 April 2012
அன்பும் காதலும்...
உயிர் ஜனிக்கையிலே..
அன்பும் ஜனிக்கிறது...
உயிரின் முதல் அன்பு...
அன்னையிடம்!
அன்பு..
ஆழ்மனதின் அணையா விளக்கு...
அன்னை, தந்தை, அக்கம் பக்கத்தார் என..
அனைவர்க்கும் பொதுவான ஓர் உணர்வு...
இனங்கள் மாறுகின்ற தருணம்...
இனம் புரியா ஓர் உணர்வு...
காதல்!
இது விழிகள் வீசுகின்ற வலை...
வீரரையும் வீழ்த்திடும் கலை...
விளையும் பயிர்களுக்கு...
விளங்கா புதிர்!
காதல் மரிப்பதுண்டு...
காதலை உயிர்ப்பித்திருக்க..
காதலர்கள் மரிக்கிறார்கள்...
ஆனால் ...
அன்பு மரிப்பதில்லை...
அன்புக்காய் யாரும் மரிப்பதில்லை....
ஆம்..
அன்பும் காதலும் வேறுதான்...
காதல் கண்களில் மட்டுமே நிறைந்திருக்கும்...
அன்பு இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும்!
-காயத்ரி பாலாஜி
Friday, 30 March 2012
தமிழனின் சரித்திரம்:
இறைவன் படைப்பினில்....
இவர்கள் ஒரு சரித்திரம்...
பிறக்கும் போதே...இவர்கள்...
இறப்புச் சான்றிதழுடன் பிறக்கிறார்கள்...
இன்றும் அகதிகளாய் தொடரும்...
இவர்கள் வாழ்க்கை....
இங்கே இவர்கள் அண்ணாந்து வானம் பார்ப்பது....
பருவ மழைக்காக அல்ல.....
பட்டாளத்தார்கள் போடும் ....
பயங்கர குண்டுகளுக்காக ..
இங்கே பூமியைத் தோண்டினால்...
நீர் ஊற்றெடுப்பதில்லை...
உதிரம் தான் ஊற்றெடுக்கும்...
இதயமில்லாதவர்களால் ...இவர்கள்..
உடலிலும்..உள்ளத்திலும் காயம் பட்டவர்கள்....
இனப் போராளிகளென இகழப்பட்டவர்கள்...
கடைசி தமிழனும் இங்கே...
புதைக்கப்பட்டாலும்....
இவர்கள் சிந்திய உதிரம்...
இன்னும் உங்கள் மண்ணிலே...
ஜீவித்திருக்கும்...!
-காயத்ரி பாலாஜி
இறைவன் படைப்பினில்....
இவர்கள் ஒரு சரித்திரம்...
பிறக்கும் போதே...இவர்கள்...
இறப்புச் சான்றிதழுடன் பிறக்கிறார்கள்...
இன்றும் அகதிகளாய் தொடரும்...
இவர்கள் வாழ்க்கை....
இங்கே இவர்கள் அண்ணாந்து வானம் பார்ப்பது....
பருவ மழைக்காக அல்ல.....
பட்டாளத்தார்கள் போடும் ....
பயங்கர குண்டுகளுக்காக ..
இங்கே பூமியைத் தோண்டினால்...
நீர் ஊற்றெடுப்பதில்லை...
உதிரம் தான் ஊற்றெடுக்கும்...
இதயமில்லாதவர்களால் ...இவர்கள்..
உடலிலும்..உள்ளத்திலும் காயம் பட்டவர்கள்....
இனப் போராளிகளென இகழப்பட்டவர்கள்...
கடைசி தமிழனும் இங்கே...
புதைக்கப்பட்டாலும்....
இவர்கள் சிந்திய உதிரம்...
இன்னும் உங்கள் மண்ணிலே...
ஜீவித்திருக்கும்...!
-காயத்ரி பாலாஜி
Subscribe to:
Posts (Atom)