முட்கள் தாங்கும் ரோஜாக்கள்:
விதைத்தது யாரென்று தெரியாமல்....
விருட்சமாய் வளர்ந்திருக்கின்றன...
எங்கள் தோட்டத்து ரோஜாக்கள்..
அரும்புகளாய் கண்டெடுத்து......
நட்டு வைத்த ரோஜாக்கள்....
நீரூற்றி வளர்த்தது யாரோ..
நிதம் வந்து பார்ப்பவர் யாரோ...
இவை..
இயற்கையாய் மலர்ந்த ரோஜாக்கள் அல்ல..
இயற்கை தந்த ரோஜாக்கள்..
இவற்றின் நிறங்கள் வேறு....
இனங்கள் வேறு....
எனினும்..
முட்கள் தாங்கிய....
இதயம் மட்டும் ஒன்றாய்...
இங்கே...வேரூன்றி விட்ட...
ரோஜாக்கள்....!
-காயத்ரி பாலாஜி
No comments:
Post a Comment