Tuesday, 28 February 2012

யுவதிகள்...

இன்றைய யுவதிகள்...
நவீன உலகின்...எந்திரன்கள்...
அடுக்களை முதல்...
அறிவியல் வரை...
அனைத்தும் அறிந்தவர்கள்...
ஆணுக்கு நிகராய்...
அங்கம் வகிப்பவர்கள்...
சிறகுகள் முளைத்ததும்...
சிந்திக்க தொடங்கியவர்கள்...
சாதித்து காட்டினார்கள்...
சரித்திரம் படைத்தார்கள்...
பாரதி சொன்ன பாங்கு...
பண்புடன் வாழ்பவர்கள்...
அன்னையாய்
துணைவியாய்...
தோழியாய்...
அவதாரம் எடுக்கின்றார்... அழகிய தேவதைகளாய்...
அரிதாரம் பூசுகின்றார்
உங்களில் ஒருத்தியாய்...உங்களுடன் வாழ்கின்றார்.....
உணருங்கள்..
யுவனுக்கும், யுவதிக்கும்...
இனம் வேறு .. ஆனால்...
மனம் ஒன்று...!

- காயத்ரி பாலாஜி...  

Friday, 10 February 2012

முட்கள் தாங்கும் ரோஜாக்கள்:

விதைத்தது யாரென்று தெரியாமல்....
விருட்சமாய் வளர்ந்திருக்கின்றன...
எங்கள் தோட்டத்து ரோஜாக்கள்..
அரும்புகளாய் கண்டெடுத்து......
 நட்டு வைத்த ரோஜாக்கள்....
நீரூற்றி வளர்த்தது யாரோ..
நிதம் வந்து பார்ப்பவர் யாரோ...
இவை..
இயற்கையாய் மலர்ந்த ரோஜாக்கள் அல்ல..
இயற்கை தந்த ரோஜாக்கள்..
இவற்றின்  நிறங்கள் வேறு....
இனங்கள்  வேறு....
எனினும்..
முட்கள் தாங்கிய....
இதயம் மட்டும் ஒன்றாய்...
இங்கே...வேரூன்றி விட்ட...
ரோஜாக்கள்....!

-காயத்ரி பாலாஜி