Tuesday, 3 January 2012

முதல் காதல்:

அன்றொரு அந்திப் பொழுதில்...
அருகில் நீ..
அசைவற்றிருந்த என் நா..
மௌனத்தில் பல மொழிகள் பேசியது..


சிறிது தூர நடைப்பயணம்...
சில்லென்ற காற்றில்...
சுவர்க்கம் இதுவென்று...
அன்று உணர்த்தியது...


இதயத்தின் துடிப்பு..
அன்று மட்டும் ...
அதிகமாய் இருந்ததால்...
சில வார்த்தை பரிமாற்றங்கள் மட்டுமே..


ஒன்றும் அறியா..
குழந்தைகள் சந்திப்பது போல்..
அன்று நம் சந்திப்பு...


காலம் நம் காதலில் கரைந்தது...
அன்று உணர்த்தியது...
முதல் காதல்..
முதல் சந்திப்பு...
இப்படித்தான் என்று....!


காயத்ரி பாலாஜி 

No comments:

Post a Comment